வேதனங்கள், வசதிகள், கொடுப்பனவுகளை நிறுத்துங்கள்..

வேதனங்கள், வசதிகள், கொடுப்பனவுகளை நிறுத்துங்கள்..

அரசியலமைப்புக்கு முரணாக வடமாகாணசபையில் 6 அமைச்சர்கள் உள்ள நிலையில் அi மச்சர்கள் என்றவகையில் ஞா.குணசீலன், க.சர்வேஸ்வரன், க.சிவநேசன் மற்றும் திருமதி அனந்தி சசிதரன் ஆகியோருக்கான கொடுப்பனவுகள் வழங்குவது சட்டத்திற்கு முரணானது. 
மேற்கண்டவாறு சுட்டிக்காட்டி எதிர்கட்சி தலைவர் சி.தவராசா பிரதம செயலாளருக்கு கடிதம் ஒன்றை இன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,  மேன்மு றையீட்டு நீதிமன்றம் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தாக்கல் செய்திருந்த 
வழக்கில் இடைக்கால தடையுத்தரவு ஒன்றை வழங்கியுள்ளது. அந்த தடையுத்தரவில் பா.டெனீஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராக இருப்பதாக கூறியுள்ளது. மேலும் அந்த இடைக்கால தடையுத்தரவின் அடிப்படையில் 
நியமன அதிகாரி அரசியலமைப்பை மீறாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். என கூறியுள்ளார். ஆனால் நேற்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் 6 பேர் அமைச் சர்களாக உள்ளதாக கூறப்படுகிறது. 
இது அரசியலமைப்பை மீறும் வகையில் அமைந்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் மற்றும் ஆளுநர் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற வடமாகாணசபை அமர்வில் நான் விசேட கருத்து ஒன்றைக் கூறியிருந்தேன். 
அந்த கருத்தின் அடிப்படையில் வடமாகாணசபையில் தீர்மானம் ஒன்று எடுக்க ப்பட்டு ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த தீ ர்மானத்தில் அரசியலமைப்பின்படி அமைச்சர் சபையை மீள் நியமனம் 
செய்யும்படி கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறான சூழலில் ஞா.குணசீலன், க.சர்வேஸ்வரன், க.சிவநேசன் மற்றும் திருமதி அனந்தி சசிதரன் ஆகியோருக்கு அமைச்சர்களுக்கான கொடுப் பனவுகளை வழங்குவதும், 
அமைச்சர்களுக்கான வசதிகளை வழங்குவதும், அமைச்சர்களாக அவர்களுடைய தனிப்பட்ட ஆளணிகளுக்கு கொடுப்பனவுகளை வழங்குவதும் சட்ட முரணான செயற்பாடாகும். என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். என கூறப்பட்டுள்ளது. 
இந்த கடிதம் வடமாகாண பிரதம செயலாளர், மத்திய கணக்காய்வாளர் நாயகம், பிரதி கண க்காய்வாளர் நாயகம் வடமாகாணம் ஆகியோருக்கு பிரதியிடப்பட்டு அனுப்பிவைக்கப்ப ட்டுள்ளது. 
ஆசிரியர் - Editor II