திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம்

திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம்
திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம்..
திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டமையினை கண்டித்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் இன்று மாலை யாழ்.நகரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டிருக்கின்றது. 
ஈழ தமிழர்கள் மீது இடம்பெற்ற இன அழிப்புக்கான சர்வதேச நீதிகோரி ஐ.நா மனித உரிமை கள் பேரவைக்கு சென்று வலியுறுத்தி வருவதுடன், தமிழக மக்களுடைய உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தும் வரும் திருமுருகன் காந்தி 
தூத்துக்குடியில் தமிழக மக்களுடைய பிரச்சினைகளுக்காக போராடியமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய கைதை கண்டித்தே நேற்று போராட்டம் நடாத்தப்ப ட்டுள்ளது. இதன்போது “இந்திய அரசசே அரச பயங்கரவாதத்தை நிறுத்து”, 
“இந்திய அரசே தூத்துக்குடியில் நீதிகேட்டு போராடிய அனைத்து செயற்பாட்டாளர்களையும் விடுதலை செய்”, போன்ற கோஷங்களை எழுப்பியவாறும் பதாகைகளை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இந்த போராட்டத்தில் பொதுமக்கள் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

ஆசிரியர் - Editor II