தீவிரவாதிகளுடன் தொடர்பு! இலங்கையர் உள்ளிட்ட கனேடிய நாட்டவர்கள் வெளிநாட்டில் கைது

தீவிரவாதிகளுடன் தொடர்பு! இலங்கையர் உள்ளிட்ட கனேடிய நாட்டவர்கள் வெளிநாட்டில் கைது

தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ளதாக தெரிவித்து இலங்யைர் ஒருவர் அடங்களாக கனேடியர்கள் உள்ளிட்ட பலர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

The Saudi Gazette வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 நாடுகளை சேர்ந்த 999 சந்தேகநபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய பெயர் பட்டியலில் கனேடியர்கள் மூவரும், புதிய நாடுகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சீனா, எரிட்ரியா, ரஷ்யா, இலங்கை, ஓமன், கிர்கிஸ்தான் மற்றும் கென்யா ஆகியவை இந்த பட்டியலில் புதிய நாடுகளாக இடம்பெற்றுள்ளன.

தீவிரவாதிகளுடன் தொடர்பு, தேசிய பாதுகாப்பில் தலையிட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள 999 பேரில் யேமனை சேர்ந்த 365 உள்ளடங்கியுள்ளதாக The Saudi Gazette வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor II