வீடியோ கேம் விளையாட்டின் விபரீதம் நால்வர் பலி

வீடியோ கேம் விளையாட்டின் விபரீதம் நால்வர் பலி
மெரிக்காவில் வீடியோ கேம் விளையாட்டு விபரீதத்தில் முடிந்ததுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஜாக்சன்வில் லேண்டிங் எனும் வணிக வளாகத்தில் இன்று வீடியோ கேம் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், மக்களை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் ஊடகங்களிடம் தெரிவிக்கையில்;
’கேம் விளையாட்டில் பங்கேற்ற நபர், தோல்வியடைந்ததால் அந்த விரக்தியில் மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்’ என தெரிவித்தார்.
கேம் விளையாட்டில் பங்கேற்ற டிரினி ஜோகா எனும் நபர், ’என் கட்டை விரலில் குண்டு பாய்ந்துள்ளது, நான் மிகவும் அதிர்ஷ்டசாலி’ என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஆசிரியர் - Editor II