சமூகவலைத்தளங்களுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை

சமூகவலைத்தளங்களுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை

கூகுள், ருவிட்டர் முகப்புத்தகம் போன்ற சமூக வலைதளங்களை ஒரு தலைபட்சமாக நடந்து கொள்வதாகவும் டிரம்ப் நியூஸ் என்ற தேடல் வார்த்தைக்கு கூகுளில் ஒருதலைபட்சமான செய்திகள் வருவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கிளடம் கருத்து தெரிவித்த டிரம்ப், கூகுள் பலரை தங்களுக்கு ஏற்றாற்போல் பயன்படுத்தி கொள்கிறது எனவும் அது கடுமையாக கவனித்தக்க வேண்டிய விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் முகப்புத்தகம் மற்றும் ருவிட்டர் நிறுவனங்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அவை குறித்து அதிகப்படியான முறைப்பாடுகள் வருவதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் இவற்றுகெதிராக எவ்விதமான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அவர் தெரிவிக்கவில்லை.

எனினும் கூகுள் தேடு தளம் அரசியல்சார்பற்று வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் எந்த ஒரு அரசியல் கட்சியின் கொள்கைக்கும் ஆதரவளிக்கவில்லை எனவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் - Editor II