சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்

சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்

திரைப்படங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த சவூதி அரேபியாவில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் கோல்ட் படம் பெற்றுள்ளது. 


மும்பை:

இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியாவில் திரைப்படங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தடை சமீபத்தில் விலக்கப்பட்டு, புதிய திரையரங்குகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், இந்தி நடிகர் அக்‌ஷய் குமார், மவுனி ராய், குனால் கபூர் உள்ளிட்டோர் நடித்த கோல்ட் என்ற திரைப்படம் நேற்று சவூதி அரேபியாவில் திரையிடப்பட்டது.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற விளையாட்டு வீரரின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியாவில் வெளியிடப்பட்டது. சவூதி அரேபியாவில் இந்த திரைப்படம் வெளியிடப்பட்டதன் மூலம், திரைப்படங்களுக்கான தடை நீக்கப்பட்ட பின், சவூதியில் வெளியான முதல் திரைப்படம் என்ற கூடுதல் பெருமையை கோல்ட் பெற்றுள்ளது. 
ஆசிரியர் - Editor II