போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா

போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா

சமந்தா நடிப்பில் யு டர்ன் மற்றும் சீமராஜா படங்கள் வருகிற 13-ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில், நாக சைதன்யா படமும் அதே நாளில் ரிலீசாவதால், கணவர் படம் வெற்றி பெறவே ஆசை என்று சமந்தா கூறினார். 

சமந்தா நடிப்பில் வரும் 13-ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் யு டர்ன். கன்னடத்தில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற யு டர்ன் படத்தின் தமிழ், தெலுங்கு பதிப்பு இது. இதில் பத்திரிகையாளராக சமந்தா நடித்துள்ளார்.

இந்த படத்துக்காக அவர் பேட்டி அளித்தபோது இதே நாளில் உங்கள் கணவர் நாக சைதன்யாவின் படமும் வெளியாகிறது. எது வெற்றி பெற வேண்டும் என்று வேண்டுவீர்கள் என்று கேட்டதற்கு என்ன இருந்தாலும் நான் முதலில் அவருக்கு மனைவி.எனவே கணவர் ஜெயிக்க வேண்டும் என்று வேண்டுவேன். இருவரது படங்களுமே வெற்றி பெறும் என்று நம்பிக்கை உள்ளது. காரணம் இரண்டுமே வெவ்வேறு வகை படங்கள்’ என்று கூறினார். சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ள சீமராஜா படமும் அதேநாளில் தான் ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் - Editor II