பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்

பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் - அக்‌ஷரா ஹாசன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. 


விக்ரம் நடிப்பில் `சாமி ஸ்கொயர்' ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்தில் நடித்து வருகிறார். 

விக்ரம் அடுத்ததாக `தூங்காவனம்' படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் துவங்கி இருக்கிறது. படத்தின் பூஜையில் கமல்ஹாசன், நடிகர் விக்ரம், அக்‌ஷரா ஹாசன், ராஜேஷ் எம்.செல்வா, ஜிப்ரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. அக்‌ஷரா ஹாசன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

View image on TwitterView image on Twitter

Raaj Kamal Films International Production No.45 starring #Vikram Sir , @aksharahaasan1, Directed by @RajeshMSelva , shooting from today✌????

விக்ரமின் 56-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். 
ஆசிரியர் - Editor II