கல்லாதவர்களே இல்லை எனும் நிலையை அதிமுக அரசு உருவாக்கி வருகிறது - முதலமைச்சர் பழனிசாமி

கல்லாதவர்களே இல்லை எனும் நிலையை அதிமுக அரசு உருவாக்கி வருகிறது - முதலமைச்சர் பழனிசாமி

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, கல்லாதவர்களே இல்லை எனும் நிலையை அதிமுக அரசு உருவாக்கி வருகிறது என தெரிவித்தார். 

சென்னை கலைவாணர் அரங்கில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி , கருவறை, ஆசிரியர் உள்ள வகுப்பறை இரண்டும் முக்கியமானது. மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க நிதி ஒதுக்கப்படும். ஆசிரியர்களுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

புதிய பாடத்திட்டங்களை சிறப்பாக கற்பிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது .

ஆசிரியர்கள் பாடம் நடத்துபவராக மட்டும் இருக்கக் கூடாது. அதையும் தாண்டி மாணவர்களுக்காக உழைக்க வேண்டும். பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். கல்லாதவர்களே இல்லை என்னும் நிலையை அதிமுக தலைமையிலான அரசு உருவாக்கி வருகிறது என தெரிவித்தார்.

மேலும், விழாவில் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், இந்தியாவிலேயே தமிழகம் தான் கல்வியில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. கூடாநட்பை உதறி தள்ள வேண்டும். என்றார். 

இந்த விழாவில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், அக்டோபர் இறுதிக்குள் 3,000 பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும் எனதெரிவித்தார்.  
ஆசிரியர் - Editor II