‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படம் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியானது

‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படம் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியானது

கௌதம் மேனன் இயக்கத்தில தனுஷ் நடிப்பில் உருவாக்கப்பட்டு வரும் திரைப்படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’

நீண்ட நாட்களாக தடைப்பட்டு போன இப்படம் குறித்து ஒரு முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

அந்தவகையில், அண்மையில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், தற்போது மொத்த படப்பிடிப்புகள் முடிந்துள்ளதாகவும், இந்த மகிழ்ச்சியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

கௌதம்  வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிக்கும் படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. ராணா, சுனேனா ஆகியோரும் கௌரவ வேடத்தில் நடித்துள்ளனர்.

மேலும் இப்படத்தில் சசிக்குமாரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகின்றது.

தர்புகா சிவா இசையில் வெளியாகியுள்ள இந்தப் படத்தின், விசிறி, மறுவார்த்தை பேசாதே ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.

தனுஷ் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அவரின் நடிப்பில் அடுத்ததாக ‘வட சென்னை’ வெளியாகவுள்ள நிலையில், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பு நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

ஆசிரியர் - Editor II