காங்கேசன்துறை பகுதியில் மனித எலும்புக்கூடு

காங்கேசன்துறை பகுதியில் மனித எலும்புக்கூடு
காங்கேசன்துறை பகுதியில் மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டு உள்ளது. 

காங்கேசன்துறை பகுதியில் உள்ள புகையிரத பாதையில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் இருந்து குறித்த மனித எழும்புக்கூடு இன்று புதன்கிழமை காலை மீட்கபட்டு உள்ளது. 

குறித்த எழும்புக்கூடு நான்கு மாதங்ககளை கடந்தது இருக்கலாம் எனவும் , அது ஆணினுடையது என தெரிவிக்கப்படுகின்றது. 

அது தொடர்பில் காங்கேசன்துறை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆசிரியர் - Editor II