களியாட்ட நிகழ்வுக்கான நுழைவு சீட்டில் சிக்கல் - தவறை தடுத்த கிருபாகரன் மற்றும் ரஜீவ்

களியாட்ட நிகழ்வுக்கான நுழைவு சீட்டில் சிக்கல் - தவறை தடுத்த கிருபாகரன் மற்றும் ரஜீவ்
யாழில்.நடைபெறும் களியாட்ட நிகழ்வுக்கான நுழைவு சீட்டில் யாழ். மாநகர சபை அனுமதி பெறப்படதவையை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் கைப்பற்றி உள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது , 

யாழ்.முத்திரை சந்திக்கு அருகில் உள்ள சங்கிலியன் (கிட்டு) பூங்காவில் களியாட்ட (கார்னிவெல்) நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. 

அந்நிகழ்வுக்கு விற்கப்படும் நுழைவு சீட்டில் யாழ்.மாநகர சபை உத்தியோக முத்திரை பொறிக்கப்பட்டு காணப்படவில்லை. அது தொடர்பில் தமிழ் தேசிய ,மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களான கிருபாகரன் மற்றும் ரஜீவ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. 

அதனை அடுத்து அங்கு சென்ற அவர்கள் நுழைவு சீட்டுக்களில் மாநகர சபை முத்திரை பொறிக்கப்படாத நுழைவு சீட்டுக்களை கைப்பற்றி உள்ளனர். 

கைப்பற்றப்பட்ட நுழைவு சீட்டுக்களை மேலதிக நடவடிக்கைக்காக யாழ்.மாநகர சபை வருமான வரி பகுதியினரிடம் ஒப்படைத்துள்ளனர் .  
ஆசிரியர் - Shabesh