1000

கடல் கடந்து வரும் கழிவுகள்

கடல் கடந்து வரும் கழிவுகள்
ர்வதேசளவில் இன்றைய நாளில் பேசுபொருளாக உள்ள பல்வேறு கருப்பொருட்களில் ஒன்றே சூழலியல் மாசுபாடு பற்றியதனாதாகும்.
இச் சூழலியல் மாசுபாடு பற்றி இன்று அதிகமாகவே பேசப்படுகின்றது, ஆராயப்படுகின்றது. அதற்கு காரணம் பூமியில் மனிதன் வாழ முடியாத நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கும் நிலையை இம் மாசுபாடுகள் ஏற்படுத்திவிட்டன.
அதற்கு காரணமும் மனிதன் மாத்திரமுமேயாகும். இயற்கை சமநிலையை குழப்பி, அதனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முனைந்த்தமையே இவற்றிக்கு காரணம்.
ஜரோப்பாவில் கைத்தொழில் புரட்சியானது ஆரம்பமானதை தொடர்ந்து உலகம் வளர்ச்சி பெறத் தொடங்கியது. பல புதிய கண்டுபிடிப்புக்கள், புதிய உற்பத்திகள், தொழிற்சாலைகள் நவீனத்துவம் என வளர்ச்சி வேகமடைந்த்து. இதனால் இரண்டு விளைவுகள் இடம்பெற்றிருந்தன. அதாவது  கைத்தொழில் புரட்சியின் காரணமாக மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வடைந்த்து. இது நேர்மறையான விளைவாகும்.
ஆனால் அதே நேரம் எதிர்மறையான விளைவானது,  இக் கைத்தொழில் புரட்சியுடன் உலகம் வளர்ச்சியடைந்த அதே வேகத்தில் சூழல் மாசுபாடும் சம அளவில் அதிகரித்திருந்த்து. இது இரண்டாவது விளைவாகும். ஆனால் அன்று அதனை மனிதன் அறிந்திருக்கவுமில்லைஇ சிந்திருக்கவுமில்லை. அதன் விளைவே இப் பூமி இன்று அமைந்திருக்கும் நிலையாகும்.
இந்நிலையில் இம் சூழலியல் மாசுபாடுகள் பற்றி பேசுகின்ற போது பொதுவாக நாம் நில மாசுபாடுஇ காற்று மாசுபாடு என்பன அறிந்திருப்போம். ஆனால் கடல் மாசுபாடு என்பது தொடர்பாக பெரிதும் அறிந்திருக்க மாட்டோம். கடலும் மாசுபடுகின்றது. ஆனால் அது தொடர்பான விழிப்புனர்வு எம்மிடம் இல்லை. அதே நேரம் கடல்வாழ் உரியினங்களுக்கு ஏற்படும் பாதிப்பு மனித குலத்திற்கு கேடு என்பதையும் நாம் அறியத் தவறி வருகின்றோம்.
இந்நிலையில் இக் கடல் மாசுபாடு என்பதில் கடலில் அதிகளவில் கொட்டப்படும் அல்லது கலோடு சேரும் குப்பை கழிவுகளில் பிரதான இடத்தினை பிளாஸ்ரிக் கழிவுகள் பெற்றுக்கொள்கின்றன. உலக நாடுகளில் வளர்ச்சியடைந்த நாடுகளை விடவும் ஆசிய நாடுகளில் இப் பிரச்சனை அதிகமாகவே உள்ளது.
பிளாஸ்ரிக் குப்பை கழிவுகள் கடலில் அதிகமாக உள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை ஜந்தாவது இடத்தில் உள்ளது. இதில் ஒரு சில நாடுகள் விடும் தவறே ஏனைய பல நாடுகளை பாதிக்கின்றது.
இவ்வாறான ஒர் பாதிப்பு தற்போது இலங்கைக்கும் ஏற்பட்டிருக்கின்றது. அண்மைக் காலமாக இலங்கையின் பல்வேறு கடற் பகுதிகளிலும் இந்திய நாட்டு பிளாஸ்ரிக் கழிவுகள் கரையொதுவங்குவது தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ் ஆண்டின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற் பரப்பிலும்இ இவ் ஆண்டின் இப் பகுதியில் புத்தளம் கடற்கரை பகுதியிலும் இப் பிளாஸ்ரிக் கழிவுகள் கரையொதுங்குவது குறித்து அப் பகுதி மீனவ சமூகத்தினரால் சுட்டிக்காட்டப்பட்டிருந்த்து.
இந்நிலையில் தற்போது தலைமன்னாரில் ஒர் கடற்கரை பகுதியிலும் இவ்வாறு பிளாஸ்ரிக் கழிவுகள் கரையொதுங்கியிருப்பதனையும் இ அதேநேரம் அக் கடற் கரை பகுதியில் சில கடலாமைகள் உயிரிழந்திருப்பதையும் அவதானித்த சுராஜ் அனுராத வன்னியராட்சிய என்ற ஒருவரே இதனை புகைப்படம் எடுத்து தனது முகநூல் ஊடாக வெளிச் சமூகத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
இதனையடுத்தே தற்போது இவ்விடயம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளதுடன் தற்போது அது தொடர்பாக பல சூழலியலாளர்களும், கடல் ஆய்வாளர்களும் கவனமெடுக்கத் தொடங்கியுள்ளார்கள்.
இவ்வாறு கரையொதுங்குகின்ற பிளாஸ்ரிக் கழிவுகளில் மருத்துவ கழிவுகள், மருந்து டப்பாக்கள், சமயலறை பிளாஸ்ரிக் கழிவுகள், உணவு பண்டங்கள் அடைத்து வந்த பொலித்தீன் பைகள், ஏனைய இரசாயன பொருட்கள் அடைக்கப்பட்டு வந்த பொலித்தீன் பிளாஸ்ரிக் கழிவுகள் என்பன காணப்படுகின்றன.
குறிப்பாக யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்கரை பகுதியில் இவ்வாறு பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்கள் மீட்கப்பட்ட போதும்இ இவ்வாறான பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்கள் கடலில் காணப்படுவதால் தமது தொழில் நடவடிக்கைகளுக்கு இவை பாதிப்பாக அமையும் என கடற்தொழிலாளர்கள் கூறியிருந்த போதும் அது தொடர்பாக அப்போது எவராலும் பெரிதும் கவனிக்கப்படவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.  
இந்நிலையில் தற்போது தலைமன்னாரிலும் இவ்வாறு பிளாஸ்ரிக் கழிவுகள் கரையொதுங்கியுள்ள நிலையில் இவை எவ்வாறு எமது கடற் பரப்புக்குள் நுழைகின்ற, அவற்றின் பாதிப்புக்கள் எவ்வாறு அமையும் என்பது தொடர்பாக  .
இதன்படி "இலங்கை தேசிய நீரியல்வள ஆராச்சி அபிவிருத்தி முகாமை நிறுவனத்தின் சமுத்திரவியல் பிரிவின் தலைவர் கணபதிபிள்ளை அருளானந்தம் என்பவருடன் இது தொடர்பாக பேசியிருந்தோம். இது தொடர்பாக அவர் பின்வருமாறு தெளிவுபடுத்தியிருந்தார்.
அதாவது தற்போது இலங்கை பல்வேறு கடற்கரைகளிலும் கரையொதுங்கும் இப் பிளாஸ்ரிக் கழிவுகளானது இந்திய மேற்கு பகுதியில் இருந்து எமது நாட்டின் கரைகளுக்கு வந்தடைந்தவையாகும்.
அதாவது மே மாதத்தின் இறுதி பகுதியில் தென் மேற்கு பருவபெயர்ச்சி காற்றின் காரணமாக கடல் நீரோடத்தின் ஊடாக இவை பயணம் செய்கின்றன. இந்தியாவின் மேற்கு பகுதியான மகாராஸ்டா, கேரளா, தமிழ்நாடு என அக் கரையோரங்களூடாக தெற்கு நோக்கி பயணித்து இலங்கை கரையோரத்தை அடைந்து அங்கிருந்து வடக்கு நோக்கி இவை சென்று மன்னார் வளைகுடாவில் காணப்படும் சுளி போன்ற இடத்தில் சேர்ந்து கரையினை அடைகின்றன.
இப் பிளாஸ்ரிக் பொலித்தீன் கழிவுகளானது நீரோடத்தில் ஒரு செக்கனுக்கு 7 சென்ரி மீற்றர் வேகத்திலேயே பயணம் செய்கின்றன. இவை ஒரு நாளைக்கு சராசரியாக 6 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்கின்றன. இவ்வாறு பயணம் செய்தே தலைமன்னார் கரையை வந்தடைந்துள்ளன.
இதேபோன்று வடகீழ் பருவ பெயர்ச்சி காற்றின் போது வங்காள விரிகுடாவில் இருந்து இந்திய கிழக்கு கரையோரப் பகுதியூடாக இலங்கையின் கிழக்கு கரையோரப் பகுதியினை வந்தடைந்து அங்கிருந்து தெற்கு நோக்கி அரேபிய கடலினை சென்றடையும். இதன்போது இக் கழிவுகள் குடாநாட்டின் நாகர்கோவில், தாழையடி, வெற்றிலைக்கேணி போன்ற கரையோரங்களில் இக் கழிவுகள் கரையொதுங்கி காணப்படும்.
இந்நிலையில் தற்போது தலைமன்னார் பகுதியில் கரை ஒதுங்கியுள்ள கழிவு பொருட்களின் மாதிரிகளை ஆய்வு செய்வதற்காக சின்னப்பாடு கற்பிட்டி போன்ற பகுதிகளிலிருந்து எடுத்து வந்துள்ளோம். இவ்வாறு மன்னார் வளைகுடாவில் கரை ஒதுங்கியுள்ள கழிவுகளில் மருத்துவ கழிவுகள், மருத்துகள் அடைத்து வந்த பிளாஸ்ரிக் டப்பாக்கள், சமயலறை வாசனை திரவியங்கள் சுவையூட்டிகள் அடைத்து வந்த பிளாஸ்ரிக் பொலித்தீன் கழிவுகளும் இதே போன்றே குளியலறை,சலவைத்தூள் பக்கெற்றுக்கள் போன்றன இனங்காணப்பட்டுள்ளன.
இக் கழிவுகளை மேல்வாரியாக ஆய்வு செய்கின்ற போது இவை இந்தியாவின் மும்பைஇ கேரளத்தின் கொள்ளம் எனும் பகுதி மற்றும் தமிழ்நாடு ஆகிய பிரதேசங்களின் உற்பத்தி பொருட்களாக காணப்படுவதுடன், இவற்றின் உற்பத்தி முடிவு திகதியினை அடிப்படையாக கொண்டு பார்க்கின்ற போது இவை ஏப்ரல் மாத காலப் பகுதியில் வீசப்பட்ட பொருட்களாகவே காணப்படுகின்றன.
இந்நிலையில் தென் மேற்கு பருவ பெயர்ச்சி காற்று தொடங்கி சரியாக 40 நாட்களின் பின்னர் சுமார் 300 கிலோ மீற்றர் தூரம் இவை பயணம் செய்து இங்கே வந்தடைந்துள்ளன. இது கடல் நீரோட்டத்தின் வேகத்துடன் ஒப்பிடப்படுகின்ற போது சரியானதாக இருக்கின்றது.
இதேபோன்று தலைமன்னார் கடற்கரையில் கடல் ஆமைகள் உயிரிழந்தமையானது பொதுவாக கடல் நீரில் ஏற்பட்ட மாறுபாடக இருக்கலாம் என்ற வித்த்திலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏனெனில் இந்திய அரேபி கடலில் இருந்து வருகின்ற நீரின் தன்மையில் வித்தியாசங்கள் காணப்படுகின்றது. பொதுவாக எமக்கு அனைத்து கடல் நீரும் உப்பு தன்மையானது என தெரிந்தாலும் சில கடல் பகுதி நீரானது உப்பு தன்மை கூடியதாகவும் குறைந்த்தாகவும் காணப்படும். அதே நேரம் நீரின் வெப்ப நிலையிலும் மாற்றங்கள் காணப்படும். 
இவ்வாறான நிலையில் இந் நீரோட்டத்தின் காரணமான கடல் நீரின் மாறுபாட்டினாலும் அதனை தாங்கி கொள்ள முடியாமல் இவை உயிரழந்திருக்கலாம் என்ற சந்தேகமும் காணப்படுகின்றது. எனவே உயிரிழந்த ஆமையின் உடலும் மற்றும் மன்னார் வளைகுடா நீரோடத்தின் மாதிரிகளும் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளன என்கிறார் அவர். 
இதேவேளை இவ்வாறு கடலில் பிளாஸ்ரிக் கழிவுகள் கலப்பதானது கடல் வளங்களிற்கும் கடல்வாள் உயிரினங்களுக்கும் கடல் பல்வகமைக்கும் எதிரான செயற்பாடாகும். குறிப்பாக தற்போது பிளாஸ்ரிக் கழிவுகள் கரையொதுங்கியுள்ள மன்னார் வளைகுடா கடலானது உயிரின பல்வகமையின் மிக முக்கியத்துவம் பெறுகின்ற கடல் பகுதியாகும். உயிரினப் பாதுகாப்பிலும் இ பவளப் பாறைகள் உள்ளிட்ட கடல் வளங்களிலும் முக்கியமான பகுதியாகும்.
இந்நிலையில் இக் கடற்பரப்பில் இவ்வாறு இக் குப்பை கழிவுகள் சேருவதானது அக் கடல் வளங்களிற்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும். குறிப்பாக கடலிலே காணப்படுகின்ற இவ் பிளாஸ்ரிக் பொலித்தீன் கழிவுகளை கடல் வாழ் உயிரினங்களான திமிங்கிலம் கடலாமைகள் போன்றன உட்கொள்வதால் அவை உயிரிழக்க நேரிடுகின்றது.  
அதேபோன்று சில பிளாஸ்ரிக் பொலித்தீன்கள் கரைந்து கண்ணுக்கு தெரியாத நுன்னியதாக மாறுவதால் அவற்றை சிறிய மீன்கள் உட்கொண்டு அவற்றில் பிளாஸ்ரிக்கின் செறிவு அதிகமாகின்றன.
இவ்வாறாக மீன்களில் பிளாஸ்ரிக்கின் செறிவு அதிகமாவதால் அதனை உட்கொள்ளும் மனிதனர்களுக்கும் அதன் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. இவை தவிரவும் கடல் வாழ் தாவரங்கள், பவளப் பாறைகள் மற்றும் ஏனைய கடலியல் உயிரினங்களும் பாதிப்படைகின்றன.
எனவே இத்தகைய பாரிய சூழல் மாசுபாடுகளை தடுக்க வேண்டிய பொறுப்பு நாடுகளின் அரசாங்கத்தையே சாருகின்றது. இக் கடல் மாசுபாடு தொடர்பில் ஒரு நாடு விடுகின்ற தவறே அதனை சுற்றியுள்ள பல்வேறு நாடுகளின் கடல் வளங்களையும் நாசமாக்குகின்றன. குறிப்பாக வளர்சியடைந்த நாடுகளான ஜரோப்பிய அமெரிக்க நாடுகள் கடல் வளங்களை பாதுகாப்பது தொடர்பில் பல சட்டங்களை உருவாக்கியுள்ளதுடன் பிளாஸ்ரிக் பொலித்தீன் பாவனைகளையும் பெருமளவு குறைத்துள்ளன.
ஆனால் ஆசிய நாடுகளை பொறுத்தவரையில் அவை இன்னமும் மந்த கதியிலேயே உள்ளது. எனவே இவ்வாறான கடல் மாசுபாடுகளை தவிர்க்க ஆசிய நாடுகள் அனைத்தும் ஒன்றினைந்து இது தொடர்பில் ஒப்பந்தங்களை உருவாக்கி கடல் வளத்யதை பாதுகாக்கின்ற திட்டங்களை ஒன்றினைந்து நாட்டிக்கு உள்ளேயும் வெளியேயும் மேற்கொள்ள வேண்டும்.
ரி.விரூஷன்

ஆசிரியர் - Shabesh