தகவல் அறியும் உரிமை- யாழ்ப்பாணத்தில் நடமாடும் சேவை!

தகவல் அறியும் உரிமை- யாழ்ப்பாணத்தில் நடமாடும் சேவை!

பன்னாட்டுத் தகவல் அறியும் உரிமை தினத்தை முன்னிட்டு கிராம மட்ட மக்களுக்கான சிறப்பு நடமாடும் சேவை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று இடம்பெற்றது

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் ‘கிராமத்திற்கான தகவல உரிமை’ எனும் தொனிப்பொருளில் இந்த நடமாடும் சேவை நடத்தப்பட்டது.

நிதி மற்றும் ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் திலகா ஜெயசுந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில் பொதுமக்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர்கள், அரச தகவல் திணைக்களத்தின் இயக்குனர் சுதர்சன குணவர்தன, நிதி மற்றும் ஊடக அமைச்சின் பிரதி செயலாளர் செல்வி சுதர்மா குணரட்ண, சேதிய ஊடக வலையத்தின் இயக்குனர் ஜெகத் லியனராசாச்சி, யாழ். மாவட்டச் செயலர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆசிரியர் - Editor II