தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு எதிராக பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது

தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு எதிராக பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நிறுத்தும்படி யாழ்.பொலிஸார் தாக்கல் செய்திருந்த கோரிக்கை மனுவை யாழ்.நீதிவான் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திட்டமிட்டபடி நாளை நல்லூரில் தியாக தீபம் திலீபனின் இறுதிநாள் நினைவேந்தல் இடம்பெறவுள்ளது

நல்லூரில் அமைந்துள்ள தியாகி தீபம் திலீபனின் நினைவு தூபியை சூழவுள்ள சுற்றுவே லிகள் மற்றும் நினைவேந்தலுக்காக போடப்பட்டுள்ள கொட்டகைகள் மற்றும் உருவப்ப டங்களை அகற்றும்படியும், நினைவேந்தலை நிறுத்தும்படியும் மாநகரசபை ஆணையாளருக்கு அவசர உத்தரவினை வழங்குமாறு

யாழ்.பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விளக்கத்தனை முன்வைப்பதற்காக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொ ள்ளப்பட்டபோதே மேற்படி பொலிஸாரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில் மாநகரசபை சார்பில் ஆஜரான சனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், ஆரசாங்கத்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக செய்யப்படும் நினைவுதூபி யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடந்த வருடம் 2 இலட்சம் ரூபாயினை திலீபனின் நினைவுதூபி அமைப்புக்காக ஒதுக்கியிருந்தார். தன் பிரகாரம் சுற்றுவேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக இவ்வருட நிதி ஒதுக்கீடாக நான் 2 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளேன்.

இதன் பிரகாரம் யாழ். மாநகர சபை தனது தீரமானங்களுக்கு ஏற்ப இதனை முன்னெடுக்கிறது என்பதை சட்டத்தரணி சுமந்திரன் மன்றுரைத்தார். இந்த நிதி ஒதுக்கீட்டிற்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது. நாளைய தினம் மேற்கொள்ளப்படவுள்ள நினைவேந்தல் நிகழ்வும் யாழ்.மாநகரசபையினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

ஆகவே இதனை தடுப்பதற்கான முன்னகர்வுகள் இல்லை என்பதை சுட்டிக்காட்டிய சட்டத்தரணி சுமந்திரன் உரிய ஆவணங்களை மன்றில் சமர்பித்தார். இதனை தொடர்ந்து பொலிஸாரின் மனு மீதான கட்டளை மதியம் 2 மணிக்கு வழங்கப்படும்

என தெரிவித்த நீதவான் சதீஸ்கரன் மேற்படி கோரிக்கை மற்றும் வாதங்களை பரீசீலனை செய்து சட்டத்தரணி சுமந்திரனின் முன்மொழிவுகளை ஏற்று பொலிஸாரின் கோரிக்கை மனுவினை நிராகரித்தார்.

ஆசிரியர் - Editor II