பிக்பாஸ் 2 சீசன் வெற்றியாளர் இவர்தான்! அதிகாரபூர்வ தகவல்

பிக்பாஸ் 2 சீசன் வெற்றியாளர் இவர்தான்! அதிகாரபூர்வ தகவல்

பிக்பாஸ் 2வது சீசன் இறுதி நாளான இன்று வெற்றியாளர் யார் என்று ரசிகர்கள் பலர் ஆர்வமாக காத்துள்ளனர்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்க, ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, மும்தாஜ், சென்றாயன், பாலாஜி, நித்யா, பொன்னம்பலம், ஷாரிக், மகத், மமதி சாரி, வைஷ்ணவி, டேனி, ரம்யா என்.எஸ்.கே, அனந்த் வைத்தியநாதன், யாஷிகா ஆனந்த் ஆகிய 16 பேர் ’பிக் பாஸ்’ வீட்டுக்குள் சென்றார்கள்.


பல்வேறு டாஸ்குகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து ஆரம்பமானது எவிக்‌ஷன் புராசஸ். ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கிய நிலையில், வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் அந்த வீட்டுக்குள் வந்தார் விஜயலட்சுமி. அடுத்தடுத்த எவிக்‌ஷனுக்குப் பிறகு, ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி ஆகிய நான்கு பேரும் இறுதிச் சுற்றுக்குத் தேர்வானார்கள். தொடர்ந்து நேற்றைய எபிசோடில் கிடைத்த ஓட்டுகளின் அடிப்படையில் குறைவாக வாங்கிய ஜனனி ஷோவிலிருந்து வெளியேற்றப் பட்டார்..

அதனைதொடர்ந்து விஜயலெட்சுமி வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் வெற்றியாளர் ரித்விக்கா என்று அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஐஸ்வர்யா ரன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


ஆசிரியர் - Editor II