மறவன்புலவு சச்சிதானந்தன் பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு வாக்கு மூலம்

மறவன்புலவு சச்சிதானந்தன் பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு வாக்கு மூலம்

சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளார். 


சிவசேனை அமைப்பின் தலைவரை விசாரணைக்காக கடந்த மாதம் 05ஆம் திகதி கொழும்புக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. 

அந்நிலையில் தான் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் , அதனால் கொழும்புக்கு வர முடியாது எனவும் கடிதம் மூலம் பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு அறிவித்து இருந்தார். 

இந்நிலையில் யாழ். நான்காம் குறுக்கு தெருவில் உள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவினரின் அலுவலகத்திற்கு இன்று வியாழக்கிழமை மறவன்புலவு சச்சிதானந்தன் அழைக்கப்பட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரி வாக்கு மூலம் பெற்று உள்ளார். 

வாக்கு மூலம் பெற்றுக்கொண்ட பின்னர் தன்னை வீடு செல்ல அனுமதித்ததாக மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்தார்
ஆசிரியர் - Editor II