ஆண் மலட்டுத்தன்மை என்றால் என்ன? உண்மையும், மூடநம்பிக்கையும்!!

ஆண் மலட்டுத்தன்மை என்றால் என்ன? உண்மையும், மூடநம்பிக்கையும்!!

உலகின் எல்லா உயிரினங்களை போலவே மனித இனமும் இனப்பெருக்கம் மூலம் தனது இனத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துகிறது.

மனித இனப்பெருக்கம் என்பது ஆண் மற்றும் பெண் இடையே பாலியல் உறவு உறவுடாக மனித கருத்தரித்தல் காரணமாக இடம்பெறுகிறது. பொதுவாக, ஒரு வெற்றிகரமான கருத்தரிப்பை உறுதி செய்வதற்காக ஆண் மற்றும் பெண் இருவருக்கும் போதுமான அளவு கருவளம் இருத்தல் வேண்டும்.

பெண் கருவுறாமைக்கு சிகிச்சையளிக்க பல மருத்துவ நிபுணர்கள் இருப்பினும், ஆண் மலட்டுத்தன்மைக்கு உரிய சிகிச்சைகள் மட்டும் அல்ல இதை பற்றிய அறிவும் பொது மக்களுக்கு தெளிவற்ற ஒன்றாக இருக்கிறது.

முட்டையை நோக்கி நீந்திச்செல்லும் விந்தணுக்கள்

ஒரு நேர்காணலில், தெற்காசியாவின் மிக சொற்பமான ஆண் மலட்டுத் தன்மை நிபுணர்களில் ஒருவரான டாக்டர் ரோஹன ப்ரியா சுசந்த ரணசிங்க, இந்த அதிகம் பேசப்படாத தலைப்பைப் பற்றி விளக்கமாக உரையாடும் போது, நமது சமுதாயத்தில் ஆழ்ந்த வேரூன்றிய பல மூடநம்பிக்கைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தார்.

கேள்வி : கருவுறாமை (infertility) என்றால் என்ன?

பதில் : கருவுறாமை என்பது ஒரு நபர், விலங்கு அல்லது தாவரம் இயற்கையின் மூலம் உற்பத்தி செய்ய இயலாமை ஆகும். இது ஆரோக்கியமான வயதுக்கு வந்தோருக்கு சாதாரணமாக வரும் ஒரு இயல்பான பிரச்சனை இல்லை. மனிதர்களில் கருவுறாமை என்பது கர்ப்பம் அடைய முடியாமையும் அல்லது கருவை கர்ப்பகாலம் முழுவதும் தாங்கிக்கொள்ள இயலாமையை ஆகும். கருத்தரித்தல் என்பது இரண்டு எதிர் பாலின அமைப்புகள் உடலுறவில் இணையும் போது விந்தின் மூலம் பெண் முட்டைகள் கருவடைவதேயாகும்.

உலக சுகாதார நிறுவனம் ‘கருவுறாமை’ என்பதற்கான வரைவிலக்கணமாக 12 மாதங்களோ அல்லது அதற்கு மேலாகவோ வழக்கமான, கருத்தடை முறைமைகள் உபயோகிக்க படாத உடலுறவின் மூலம் கர்ப்பமடைய இல்லயாமையே ஆகும்.

முதன்மை கருவுறாமை என்பது குழந்தையே பிறக்காத ஒரு தம்பதியின் கருத்தரிப்பு குறைபாடு ஆகும். இரண்டாம் கருவுறாமை என்பது குழந்தை உள்ள ஒரு தம்பதியின் கருத்தரிக்கும் இயலாமை ஆகும். ஆண்கள் மற்றும் பெண்களின் கருவளம் சுகவீனம், சிலவகை தொற்றுக்கள் அல்லது நோய்களின் மூலம் பாதிக்கப்படலாம் ஆனால் பெரும்பாலும் வெளிப்படையான காரணம் இல்லை.

பெரும்பாலான மருத்துவ பயிற்சியாளர்கள் ஒரு வருடத்திற்குள்ளான கருத்தரிப்பு குறைபாட்டை ‘லேசான மலட்டுத்தன்மையின்’ வாய்ப்பாக கருதுகின்றனர். நாம் லேசான மலட்டுத்தன்மை என்கின்ற பதத்தை உபயோகிக்காமல் நோயாளிகளை கருத்தரித்தல் சோதனைகளுக்கு உள்ளாக்குகின்றோம். லேசான மலட்டுத்தன்மையும் தம்பதிகளின் வயதிலும் தங்கியுள்ளது. நோயாளிகள் 25 அல்லது அதற்கு அதற்க்கு உட்பட்டவர்களாக இருந்தால், இரண்டு ஆண்டுகள் காத்திருக்க சொல்வது வழமையாகும். அதுவே 30 வயதுடையவர்கள் ஒரு வருடம் காத்திருக்கவும், ஆனால் 35 மற்றும் அதற்க்கு மேல் இருக்கும் தம்பதிகளுக்கு இது 6 மாதமாக குறைக்கப்படுகிறது.

ஆரோக்கியமான பெண் இனப்பெருக்க அமைப்பு

கேள்வி : பொது மக்களிடையே பெண் கருவுறாமை பற்றி நிறைய பேச்சு உள்ளது, ஆனால் ஆண் கருத்தரித்தல் பற்றி போதுமான விழிப்புணர்வு இல்லை என்று அநேகர் நினைக்கிறார்கள். டாக்டர், சரியாக ஆண் மலட்டுத்தன்மை என்றால் என்ன?

பதில் : ஆண் மலட்டுத்தன்மை என்பது கருவளம் மிக்க ஒரு பெண்ணை கருத்தரிக்க வைக்க முடியாத ஒரு ஆணின் இயலாமையை குறிக்கின்றது. எனது சமுதாயம் கலாச்சார பிற்போக்கு மற்றும் பாலின சமத்துவமின்மை போன்ற காரணங்களால் இந்த பிரச்சினையின் பரிமாணத்தை ஏற்றுக்கொள்ள தவறிவிட்டாலும் கூட இது ஒரு உலகளாவிய மருத்துவ பிரச்சினை ஆகும்.

1971 ஆம் ஆண்டில், மொத்த உலக மக்கள் தொகையில் வெறும் 5 சதவீதத்தினர் லேசான மலட்டுத்தன்மையினால் பாதிக்கப்பட்டிருந்தனர், 2012 ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை பல்வேறு சமூக, சுற்றுச்சூழல் மற்றும் உணவுக் காரணிகள் காரணமாக 15 சதவிகிதம் ஆக உயர்ந்துள்ளது.

இதை பற்றிய ஆய்வுகள் ஆண்களும் பெண்களும் சமமாக அல்லது தோராயமாக 40 சதவிகிதம் லேசான மலட்டுதன்மைக்கு பங்களிப்பு செய்கின்றனர், என்றும் ஆனால் மிகுதியான 20 சதவிகிதம் பிரச்சனைகள் “விளக்கப்படமுடியாத” (‘Unexplained’) என்று வகைப்படுத்தப்படுகின்றன என்றும் கூறுகின்றன.

நான் முன்னரே குறிப்பிட்டது போல கருவுறாமை , முதன்மை மற்றும் இரண்டாம் என வகைப்படுத்தப்படுகிறது. குழந்தையே பிறக்காதவர்களுக்கும் முதலில் குழந்தை பெற்றுக்கொண்டவர்களுக்கும் இந்த பிரச்சினை இருக்கும்.

கேள்வி : எவ்வாறு நீங்கள் ஆண் லேசான மலட்டுத்தன்மையை (Mild male factor infertility- MMFI) கண்டறிவீர்கள்? அதற்கான காரணங்கள் என்ன?

பதில் : ஆணின் லேசான மலட்டுத்தன்மை என்பது ஒரு கர்ப்பத்தை ஏற்படுத்தக்கூடிய திறன் நோயாளின் விந்தில் மற்ற சாதாரண ஆணின் விந்தை விட குறைவாக இருப்பதே ஆகும். இதற்கு முக்கியமான மூன்று காரணங்கள் உள்ளன.

1. குறைந்த விந்தணு எண்ணிக்கை – (எண்ணிக்கையில்) – மருத்துவர்களால் ஏற்றுக்கொள்ள பட்ட குறைந்தபட்ச விந்தணு எண்ணிக்கை ஒரு மில்லிலிட்டர் விந்தில் 15 மில்லியன் விந்தணுக்கள் ஆகும்.

2. கீழ் இயக்கம் – விந்தின் இயக்கம் என்பது ஒரு விந்தணுவின் அசைவும் மற்றும் நீச்சல் தன்மை ஆகும். ஒரு விந்தணு சரியான முறையில் இயங்கமுடியாமையே கீழ் விந்து இயக்கம் ஆகும். விந்தணு இயக்கம் ஆஸ்டெனோசோஸ்பெர்பெரியா (asthenozoospermia) எனவும் அழைக்கப்படுகிறது.

– சாதாரண மற்றும் அசாதாரண விந்தணுக்கள்

3. அசாதாரண விந்து உருவகம் – விந்து உருவகம் என்பது விந்தையின் வடிவம் அல்லது உடல் தோற்றம் ஆகும். விந்து உருவகம் உள்ள அசாதாரணங்கள் கருவுறாமை காரணமாக ஏற்படும் கஷ்டத்தை ஏற்படுத்தும்.

நீங்கள் பெண் மலட்டுத்தன்மை பற்றி மக்கள் சற்று அதிகமாகவே தெரிந்து வைத்துள்ளார்கள் என்று கூறினாலும் அதை பற்றிய நிறைய கலந்துரையாடல்கள் நடந்தவண்ணம் உள்ளன. ஆண் மலட்டுத்தன்மை என்பது ஒரு தீண்டப்படாத விடயமாகவே போய் விட்டது. இதன் காரணமாகவே இதை பற்றிய சரியான அறிவு இல்லாமல் போய்விட்டது. தனது எதிர்பாலினத்தை போல லேசான மலட்டுத்தன்மை மற்றும் கருவுறாமை பிரச்சனைகளை ஆண்கள் வெளிப்படையாக பேச விரும்புவது இல்லை.

ஆனால் இன்று லேசான ஆண் காரணி கருவுறாமை ஒரு பெரிய விடயம் அல்ல. எவரும் அங்கீகாரம் பெற்ற ஆய்வுகூடத்திலும் தனது விந்தணு வளத்தை சோதனை செய்து அவரது சொந்த முடிவுகளை கண்டறிய முடியும். நான் கூறவருவதெல்லாம் ஆண் மலட்டுத்தன்மை என்பது பயப்பட வேண்டிய விடயமே அல்ல. லேசான மலட்டு தன்மைக்கான சிகிச்சைகளை இலங்கையிலே பெற்றுக்கொள்ள முடியும்.

கேள்வி : லேசான மலட்டுத்தன்மை கொண்ட கொண்ட ஆண்களுக்கான மருத்துவ சிகிச்சைகள் என்ன?

பதில் : ஆய்வியல் மூலம் நாம் உருவாக்கிய ஆயுர்வேத சிகிச்சை தவிர, நவீன மருத்துவத்தில் லேசான ஆண் காரணி கருவுறாமைக்கான உலகளாவிய ஏற்றுக்கொள்ளப்பட்ட சிகிச்சைகள் எதுவும் இல்லை. இதே பிரச்சினை பக்கவாதத்திற்கும் உள்ளது . ஆயுர்வதத்தை தவிர வேறு சிகிச்சைகள் பக்கவாதத்திற்கு இல்லை.

ஒரு நோயாளி லேசான ஆண் காரணி மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டிருந்தால், அவருக்கு உதவக்கூடிய இனப்பெருக்கம் தொழில்நுட்பங்களைத் தேடுவதை தவிர வேறு வழி இல்லை. இருப்பினும் இலங்கையில் மருத்துவ செலவுகள் போன்ற ஒரு நாட்டில் ஒப்பீட்டளவில் அதிகமானவை (சராசரியான குடிமக்களின் வருமானத்துடன் ஒப்பிடுகையில்). செயற்கை கருத்தரித்தல் ((IVF)) அல்லது டெஸ்ட் குழாய் குழந்தை முறையாக பிரபலமாக அறியப்படுவது மிகவும் செலவான ஒன்றாகும்;, அதே சமயத்தில் இலகுவான கருவிழி கருவி (IUI) உம் கூட அதிகப்படியான செலவை கொண்டது.

கேள்வி : இந்த நடைமுறைகள் லேசான ஆண் காரணி கருவுறாமைக்கு சிகிச்சையளிக்கும் வகையில் உதவுகின்றனவா?

பதில் : ஆமாம் அது ஒரு பிரச்சினை. இந்த செயற்கையான இனப்பெருக்க முறைகள், இயற்கையாக கருத்தரிக்க முடியாத நோயாளிகளுக்கு உதவினாலும் கூட இவை நிரந்தரமான சிகிச்சைகள் அல்ல. இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால் இந்த அதிக விலையுள்ள முறைகளின் வெற்றி விகிதம் மிகவும் குறைவாக வாய்ப்பு உள்ளது. ஆனால் இத்தகைய சந்தர்ப்பங்களில் ஆண் மலட்டுத்தன்மையை குறைக்கும் சிகிச்சைமுறைகள் வெற்றி விகிதத்தை மேலும் அதிகரிக்கும்.

மேலைத்தேய நாட்டுமக்களை தவிர ஆசியநாடுகளில் குறிப்பாக இலங்கையில் உள்ளவர்கள் இந்த ஆண் மலட்டுத்தன்மையக்கு சிகிச்சை கிடைக்கின்றது என்றும் ஆயுர்வேதம் மூலம் வெற்றிகரமாக ஆண் கருவுறாமைக்கு சிகிச்சையளிக்க முடியும் என்றும் தெரிந்துகொள்வது இல்லை.

கேள்வி : எனவே நம் சமுதாயத்தில் கருவுறாமை பற்றிய போதுமான அறிவைக் கொண்டிருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில் : துரதிஷ்டவசமாக இல்லை. இனப்பெருக்கத்தின் அடிப்படை செயல்பாட்டை நிகழ்த்துவதற்கான இனப்பெருக்க முறைகளின் திறனைக் குறைக்கும் பல காரணிகள் உள்ளன. ஒரு குழந்தையை கருத்தரிப்பது என்பது எளிய இயற்கையான செயல்முறை போல் தோன்றினாலும், அதை நிகழ்த்துவதற்கான உள் மற்றும் உடலியல் செயல்பாடுகள் மிகவும் சிக்கலானவை இந்த நுட்பமான செயல்பாடுகள் பல காரணிகளை சார்ந்து இருக்கின்றன.

ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்தணு உற்பத்தி, பெண்ணின் ஆரோக்கியமான கருவூல உற்பத்தி, விந்தணு கருவை விந்துதள குழாய்களில் தடையின்றி நெருக்குங்குவது, கருமுட்டையை கருத்தரிக்க வைக்கும் அந்த விந்தணுவின் திறன், தன்னை கருப்பையுடன் பிணைத்துக்கொள்ளும் அந்த கருவுற்ற முட்டையின் ((Zygote)) திறன், இறுதியாக கருத்தரத்தை (embryo quality)  அடையும் அந்த முட்டையின் திறன் ஆகியவற்றை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான ஆண் இனப்பெருக்க அமைப்பு

நாம் பல முன்னேற்றங்களைப் பெற்றிருந்தாலும் நவீன மருத்துவத்திடம் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் விந்தணுவின் உருவகம் மற்றும் உருவியலை அதிகரிக்கும் முறைமைகள் சரியான அளவில் இல்லை. இதனாலேயே ஆண் மலட்டுத்தன்மையை மட்டுப்படுத்துதல் என்பது எனது பார்வையில் திருப்திகரமாக இல்லை.

இருப்பினும் ஆயுர்வேத மருத்துவமானது இந்த சமுதாயத்தில் விந்தணு தரம் மற்றும் அளவு ஆகியவற்றில் கணிசமான முன்னேற்றத்தை வழங்குகின்றது. ஆயுர்வேத சிகிச்சைகள், மூலிகை சார்ந்த ஆயுர்வேத சிகிச்சைகள் ஆரோக்கியமான விந்து உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்பதை நிரூபிக்கின்றன.

 

(டாக்டர் ரோஹன ப்ரியா சுசந்த ரணசிங்க  [PhD, D.S.A.M.S., B.A.C.(Pg.D.), M.A.B.A.C.]

ஒரு குறிப்பிடத்தக்க ஆயுர்வேத மருத்துவரும் ஆராய்ச்சியாளருமான டாக்டர் ரணசிங்கேயின், மூலிகை மருத்துவத்தின் பாரம்பரிய மற்றும் பரம்பரையியல் பற்றிய அறிவு மலட்டுத்தன்மையைக்கு சிகிச்சை அளிப்பதற்கு காரணமாக இருந்தது.

ஆசிரியர் - Editor II