துமிந்தவிற்கான மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்று.

துமிந்தவிற்கான மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்று.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் பாரத லக்ஷ்மன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தபோது மக்கள் மத்தியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தார். இக்கொலைக்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட ஐவருக்கு கொழும்பு மேல் நீதிமன்று மரண தண்டனை வழங்கியிருந்தது. 

கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 08ம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டை விசாரணை செய்த உச்ச நீதிமன்று தீர்ப்பு சரியானது என மரண தண்டனையை உறுதி செய்துள்ளது. 

இந்த மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பு இன்று (11) உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதியரசர்கள் குழுவால் அறிவிக்கப்பட்டது.


ஆசிரியர் - Editor II