பாலியல் புகார் கூறும் பெண்களுக்கு தகுந்த ஆதாரம் வேண்டும்: மெலானியா ட்ரம்ப்!

பாலியல் புகார் கூறும் பெண்களுக்கு தகுந்த ஆதாரம் வேண்டும்: மெலானியா ட்ரம்ப்!

p>இணையத்தில் வைரலாகி வரும் #மீ டூ பாலியல் புகார் இயக்கம் குறித்துக் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மனைவி மெலானியா ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் #மீ டூ இயக்கத்தின் மூலம் பெண்கள் பலர் தற்போது தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியான பாதிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மெலானியா, #மீ டூ இயக்கம் குறித்துக் ஏபிசி செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தார்.

அப்போது, அவர் கூறும்போது மீ டூ இயக்கப் பெண்கள் வெளியிடும் கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும். அவர்களை நாம் அரவணைக்க வேண்டும்.

எனினும், புகார் கூறும் பெண்கள் அனைவரும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரத்தை வைத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மற்றவர்கள் மீது புகார் கூறும்போது நீங்கள் வெறுமனே நான் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டேன் என்று கூறக்கூடாது என்றார்.

முன்னதாக, அமெரிக்க அதிபரும், மெலானியாவின் கணவருமான டொனால்ட் ட்ரம்ப், இதுபோன்ற ஏராளமான பாலியல் புகார்களை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.


ஆசிரியர் - Editor II