அரசியல் கைதிகள் விடுவிப்பு: பேச்சு தொடரும் என்கிறார் பிரதமர்

அரசியல் கைதிகள் விடுவிப்பு: பேச்சு தொடரும் என்கிறார் பிரதமர்

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து தொடர்ந்தும் பேச்சு நடத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (10) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பியால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2001 – 2002 காலப்பகுதியில் சில தமிழ்க் கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை உண்மைதான். அவர்களுக்கு எதிராக பாரதூரமான குற்றச்சாட்டுகள் இருக்கவில்லை. அதன்பின்னர் வந்த அரசாலும் விடுவிப்பு நடந்துள்ளது. 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னரும் சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

படுகொலைகளுடன் தொடர்புடையவர்களுக்கு நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிலருக்கு எதிராக வழக்குகள் நடைபெற்று வருகின்றன. எனினும், இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் பேச்சு நடத்தப்படும்” – என்றார்.

ஆசிரியர் - Editor II