இன்னும் 60 நாட்களுக்கு பிறகு மாகாணசபைத் தேர்தல்!

இன்னும் 60 நாட்களுக்கு பிறகு மாகாணசபைத் தேர்தல்!

பதவிகாலம் முடிவடைந்துள்ள மாகாணசபைகளுக்கு இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் நடத்தப்படுவதற்குரிய வாய்ப்பு இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்று அறிவித்தது.


சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு இன்று தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது.


இக்கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே சு.க. உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மேற்படி கருத்தை வெளியிட்டார்.

“அனைத்து கட்சிகளும் மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்தவே எதிர்பார்க்கின்றன. தேர்தலை காலம் தாழ்த்துவது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல.
சுதந்திரக் கட்சி தேர்தலை காலம் தாழ்த்துவதாக எவர் குற்றஞ்சாட்டினாலும் அது அவர்களின் தனிப்பட்ட எண்ணம். ஆனால் சுதந்திரக் கட்சி தேர்தலை விரைவில் நடத்தவே எதிர்பார்க்கின்றது.

எல்லை நிர்ணய அறிக்கை மீதான மீளாய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டவுடன் இரண்டு மாதங்களில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படலாம்” என்றும் அவர் கூறினார்.

ஆசிரியர் - Editor II