காணிகள் விடுவிக்கப்படவுள்ளன.. விபரங்களை உடன் பதியவும்

காணிகள் விடுவிக்கப்படவுள்ளன.. விபரங்களை உடன் பதியவும்

வலிகாமம் வடக்கில் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களின் காணிகள் ஒருபகுதி விடுவிக்கப்படவுள்ளது.

(விமான நிலைய ஓடுபாதை அண்மையில்) ஜே/238 கிராம சேவையாளர் பிரிவு கட்டுவன் காசிஅம்மன் கோயில் பக்கமுள்ள காணி உரிமையாளர்கள் அடுத்த வாரத்துக்குள் தங்கள் காணிப்பதினை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை 15 ஆம் திகதி கட்டுவன் காசிஅம்மன் கோயில் வீதிக்கு வருகைதருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் கிராம சேவையாளரும் மக்கள் சிலரும் விடுவிக்கப்படாத காணிகளுக்குள் இராணுவத்தால் அழைத்து செல்லப்பட்டு குடியிருப்பாளர்களின் விபரங்கள் இனங்காணப்பட்டன.

ஆசிரியர் - Editor II