ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முஸ்லிம் அரசியல்வாதியின் வீட்டிலிருந்து மீட்டது STF ஆயுதங்கள்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முஸ்லிம் அரசியல்வாதியின் வீட்டிலிருந்து மீட்டது STF ஆயுதங்கள்

இன்று காலை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாவனல்லை அமைப்பாளரான இம்தியாஸ் காதர் என்பவரின் வீட்டினை சோதனையிட்ட விசேட அதிரப்படையினர் அவ்வீட்டிலிருந்து சட்ட விரோத துப்பாக்கிகளை மீட்டுள்ளனர். 

காதரின் வீட்டிலிருந்து அனுமதிப்பத்திரமற்ற மூன்று துப்பாக்கிகள் மற்றும் அதற்கான தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. துபாயிலிருந்து வரவழைக்கப்பட்ட பிரபுக்களுக்கான பாதுகாப்பு பிரிவினர் பயன்படுத்தும் எம்பி 5 ரக துப்பாக்கி ஒன்று, ரி 56 ரக துக்பாக்கி ஒன்று , றிப்பிட்டர் ரக துப்பாக்கி ஒன்று என்பனவே கைது கைப்பற்றப்பட்டுள்ளஆயுதங்களாகும். 

தொடர்ந்து முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான இம்தியாஸ் காதர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் திட்டமிட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார். 

முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் புலிகளின் ஆயுதங்கள் உண்டு என முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். மறுபுறத்தில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் செயற்பாடு இலங்கையில் பெருகிவருகின்றது என்றும் அவர்கள் இங்கே ஆயுதங்களை குவிக்கின்றனர் என்றும் பெரும்பாண்மையினத்தை சேர்ந்த அமைப்புக்கள் பல கோஷமிட்டு வந்த நிலையில் இவ்வாயுத மீட்பும் கைதும் இடம்பெற்றுள்ளது. 

குறிப்பாக எம்பி 5 ஆயுதங்கள் பிரபுக்கள் பாதுகாப்புக்காக இறக்குமதி செய்யப்படுகின்றவை. அவை யுத்தத்திற்கு பயன்படுத்தப்படாக ஆயுதங்கள் அந்தவகையில் அவை இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்டு தப்பியோடிய இராணுவத்தினரிடமிருந்து கொள்வனவு செய்து கொண்டதாக கருத முடியாது. மறுபுறத்தில் குறித்த ரக ஆயுதங்களை புலிகளியக்கத்தினர் பயன்படுத்தவில்லை என்றும் நம்பப்படுகின்றது. அவ்வாறாயின் இவ்வாயுதம் எங்கிருந்து யாரால் எதற்காக இங்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்ற கேள்விகளுக்கான பதில் சில பல முடிச்சுக்களை அவிழ்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 


ஆசிரியர் - Editor II