வவுனியா புளியங்குளம் பகுதியில் விபத்து

வவுனியா புளியங்குளம் பகுதியில் விபத்து

வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். 


வவுனியா புளியங்குளம் பகுதியில்  வியாழக்கிழமை காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் யாழ்ப்பாணம் வடமராட்சியை சேர்ந்த மரியதாஸ் நிரோசன் எனும் இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அத்துடன் செ. அஜந்தன் எனும் இளைஞன் கை துண்டிக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்துள்ளதுடன் மேலும் ஒரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். 

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் போத்தல்களை எடுத்து வந்த கன்ரர் ரக வாகனம் புளியங்குளம் பகுதியில் அருவி வெட்டும் இயந்திரத்தை ஏற்றியவாறு வீதியோரம் தரித்து நின்ற உழவு இயந்திரத்துடன் மோதியதாலையே குறித்த விபத்து இடம்பெற்று உள்ளது. 

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். 

ஆசிரியர் - Editor II