தமிழரசு கட்சியிலிருந்து விலகினார் அனந்தி, பதவி பறிக்கப்படும் என பயந்து அமைதியாக இருந்தாரா?

தமிழரசு கட்சியிலிருந்து விலகினார் அனந்தி, பதவி பறிக்கப்படும் என பயந்து அமைதியாக இருந்தாரா?

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் இருந்து முழுமையாக விலகிக்கொள்வதாக வடக்கு மாகாண சபையின் மகளிர் விவகார கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் கட்சித் தலமைக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் தமிழரசுக் கட்சி பெண் உறுப்பினரான அனந்தி சசிதரன் கட்சியின் உள் முரண்பாடுகள் தொடர்பாக கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையிலும் கட்சியில் தொடர்ந்தும் அங்கத்துவத்தைப் பெறவே விரும்பியிருந்தார்.

இவ்வாறு கட்சியில் தொடர விரும்பியமையானது கட்சியில் இருந்து விலகும் பட்சத்தில் அவரது மாகாண சபை உறுப்பினர் பதவியும் பறிக்கப்படும் நிலமை ஏற்படும் என்பதனால் அமைச்சராக தொடரும் விருப்பம்கொண்டு கட்சியில் முரண்பாட்டிற்கு மத்தியிலும் அங்கம் வகித்தார்.

இதேநேரம் வடக்கு மாகாண சபையின் ஆயுட் காலம் எதிர்வரும் 24ம் திகதி நள்ளிரவுடன் நிறைவு பெறும் நிலையில் குறித்த பதவி விலகலை சமர்ப்பித்துள்ளார்.

இதேநேரம் புதிய கட்சிக்கான அறிவித்தலை இன்றைய தினம் அனந்தி சசிதரன் வெளியிட்டு ள்ள நிலையில், 19ம் திகதியிடப்பட்ட கடித்த்தினை கட்சியின் தலமைக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைத்துள்ளார்.

இதேவேளை கடந்த 19ம் திகதி முதல் அனந்தி கட்சியில் இருந்து தானாகவே விலகியமையினால் குறித்த திகதியுடனேயே அவரது மாகாண சபை உறுப்பினர் பதவியும் பறிக்கப்படுமா ?

என்ற கேள்வியும் அதற்கு பின்பு பயன்படுத்தும் மாகாண சபைச் சொத்துக்களிற்கு யார் பொறுப்பாளி என்ற கேள்வியும் எழுந்து நிற்கின்றது.

ஆசிரியர் - Editor II