ரபேல் ஒப்பந்த விவகார வழக்கு - பா.ஜனதா முன்னாள் மந்திரிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்

ரபேல் ஒப்பந்த விவகார வழக்கு - பா.ஜனதா முன்னாள் மந்திரிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவிடக்கோரி யஸ்வந்த் சின்கா, அருண் சோரி மற்றும் வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 


புதுடெல்லி:

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக பா.ஜனதாவின் முன்னாள் மத்திய மந்திரிகளான யஸ்வந்த் சின்கா, அருண் சோரி ஆகியோர் முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவை சந்தித்து இது தொடர்பாக கடந்த 4-ந்தேதி புகார் செய்தனர். ரபேல் ஒப்பந்தத்தில் குற்ற முறைகேடு நடந்திருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.இந்தநிலையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவிடக்கோரி யஸ்வந்த் சின்கா, அருண் சோரி மற்றும் வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

தங்கள் புகாரில் தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் விசாரித்து அது குறித்த அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிடுமாறும் அவர்கள் தங்கள் மனுவில் கூறியிருந்தனர்.
ஆசிரியர் - Editor II