அஜித்தின் அடுத்த படத்தின் பிரமாண்டக் கூட்டணி

அஜித்தின் அடுத்த படத்தின் பிரமாண்டக் கூட்டணி

விஸ்வாசம்' படத்தை தொடர்ந்து அஜித் - எச்.வினோத் கூட்டணியில் அடுத்ததாக உருவாக இருக்கும் புதிய படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் 'விஸ்வாசம்' படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

பொலிவுட்டில் வரவேற்பை பெற்ற பிங்க் திரைப்படத்தின் ரீமேக் தான் இது என்றும், ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வலம் வருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தமாகும் பட்சத்தில், அஜித் - எச்.வினோத் - ஏ.ஆர்.ரஹ்மான் - போனி கபூர் என பிரம்மாண்ட கூட்டணி உருவாகுவது நிச்சயம். ஏ.ஆர்.ரஹ்மான் முன்னதாக அஜித்தின் வரலாறு படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இந்த படத்தின் மூலம் நஸ்ரியா தமிழில் ரீ-எண்ட்ரி கொடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அஜித்தின் 59-வது படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பெப்ரவரியில் ஆரம்பிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர் - Tamilan