உலகிலேயே மிக உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலை திறப்பு

உலகிலேயே மிக உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலை திறப்பு

உலகிலேயே மிக உயரமான சிலையான சர்தார் வல்லபாய் படேல் சிலையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்தார்.

இந்தியாவின் 'இரும்பு மனிதர்' என்று அழைக்கப்படும் முதலாவது உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டு உள்ளது. நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சாது பேட் என்ற குட்டித்தீவில் இந்த சிலை 182 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்தார் வல்லபாய் படேல், நாட்டை ஒன்றுபடுத்தியதை குறிப்பிடும் வகையில், 'ஒற்றுமைக்கான சிலை' என்று இது அழைக்கப்படுகின்றது.

ஆசிரியர் - Editor II