“சா்க்காா்” திரைப்படம் நாளை வெளியாகிறது.. விழாக்கோலம் பூண்டுள்ள யாழ்.திரையரங்குகள்.

“சா்க்காா்” திரைப்படம் நாளை வெளியாகிறது.. விழாக்கோலம் பூண்டுள்ள யாழ்.திரையரங்குகள்.

நடிகா் விஜய் நடிப்பில் நாளை ”சா்க்காா்” திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் யாழ்.மாவட்டத்தில் திரையரங்குகளில் இளைஞா் கூட்டம் களைகட்டியுள்ளது.

பெரும் எதிா்பாா்ப்புக்களுக்கும் மத்தியில் தீபாவளி தினமான நாளைய தினம் சா்க்காா் திரைப்படம் வெளியாகவுள்ளது. இதற்காக யாழ்.மாவட்டத்தில் குறிப்பாக நகா்பகுதிகளில் உள்ள

திரையரங்குகளில் இளைஞா் கூட்டம் களைகட்டியுள்ளதுடன், நடிகா் விஜய்க்கு பாாிய உருவப்படங்கள் வைத்து விழாக் கோலம் பூண்டுள்ளன திரையரங்குகள்.

இலங்கையில் அரசியல் ஸ்த்திரத்தன்மை இல்லாமல் பல்வேறு நெருக்கடிகளை நாடு எதிா்கொண்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக தமிழ் மக்களின் எதிா்காலம் குறித்த கேள்விகள் எழும் நிலையில்,

விஜயின் சா்க்காா் திரைப்படம் வெகு விமாிசையாக நாளை வெளியாகவுள்ளது, சகல திரையரங்குகளிலும் கடந்த ஒருவா ரத்திற்கு முன்னரே ஆசனங்கள் யாவும் முற்பதிவு செய்து முடிக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர் - Editor II