முதல் நாள் வசூலில் காலா, பாகுபலியை மிஞ்சிய சர்கார்!

முதல் நாள் வசூலில் காலா, பாகுபலியை மிஞ்சிய சர்கார்!

சென்னையில் சர்கார் திரைப்படமானது முதல் நாள் மட்டும் 2.37 கோடி ரூபாய் வசூல் செய்து காலா, பாகுபலியின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் – தளபதி விஜய் கூட்டணியில் சன் பிக்சர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான சர்கார் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, ராதாரவி, பழ.கருப்பையா ஆகியோர் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

அரசியல் பின்னணியைக் கதையை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கத்தி மற்றும் துப்பாக்கி ஆகிய படங்களைத் தொடர்ந்து இந்தப் படமும் ஹிட் கொடுத்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் சர்கார் திரைப்படத்தின் முதல் நாள் மட்டும் 2.37 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதனால், காலா, பாகுபலி திரைபடத்தின் வசூல் சாதனையை முறியடித்து விஜய்யின் சர்கார் முதலிடத்தில் உள்ளது.

சென்னையைப் பொருத்தவரையில், மொத்தம் 22 திரையரங்குளில் முதல் நாள் மட்டும் 330 காட்சிகள் சர்கார் திரையிடப்பட்டது. காலை முதல் இரவு வரையில் அனைத்து காட்சிகளும் ரசிகர்களின் ஆரவாரம் களைகட்டியது. தமிழகம் முழுவதும் 650க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் சர்கார் திரையிடப்படுகிறது. சுருக்கமாக சொல்லப்போனால், தமிழகத்தின் 85 சதவீத திரையரங்குகளில் விஜய்யின் சர்கார் தீபாவளி தான் கொண்டாடப்படுகிறது.


ஆசிரியர் - Editor II