14 க்கு முன்னர் பாராளுமன்றை கூட்டமாட்டோம், ஆனால் 14ல் பிற்போடுவோம். லக்ஷ்மன் யாப்பா

14 க்கு முன்னர் பாராளுமன்றை கூட்டமாட்டோம், ஆனால் 14ல் பிற்போடுவோம். லக்ஷ்மன் யாப்பா

எதிர்வரும் 14ம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றம் கூட்டபடாது எனவும், 14ம் திகதி அமர்வின் பின் பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்படும் எனவும் புதிய அமைச்சரவையின் அமைச்சர் லக் ஷமன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். 

பிரதமர் காரியாலயத்தில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்த அவர் , பாராளுமன்ற அமர்வின் போது கௌரவ ஜனாதிபதி அவர்களின் கொள்கை பிரகடனம் மட்டுமே முன் வைக்கப்படும், எனவும் ஏனைய கருமங்கள் எதுவுமே நடைபெறாது எனவும் கூறினார்.

மேலும், அவர் குறிப்பிடுகையில் பாராளுமன்றம் அமர்வின் பின் நடைபெறவுள்ள கட்சி தலைவர் கூட்டத்தின் போது ஏனைய அரசியல் நடைமுறைகள் பற்றி ஆராயப்படும் எனவும், நாட்டின் நிலவும் குழப்பமான சூழ்நிலை முடிவுக்கு கொண்டு வரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்

ஆசிரியர் - Editor II