தலைவருக்கு வேண்டாமென்றால் எங்களுக்கு கபினட் வேண்டும். விமலின் சகாக்கள் ஒப்பாரி.

தலைவருக்கு வேண்டாமென்றால் எங்களுக்கு கபினட் வேண்டும். விமலின் சகாக்கள் ஒப்பாரி.

தேசிய சுதந்திர முன்னனி தலைவர் விமல் வீரவங்ச அமைச்சு பதவி எதுவும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரின் கட்சி உறுப்பினர்கள் தலைவருக்கு அல்லாவிட்டால் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவருக்கு கபினட் வழங்கவேண்டும் என முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர். 

நான் அமைச்சு பதவியை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்ற உறுதியில் இருக்கும் கட்சி தலைவர்க்கு மதிப்களித்து, அவருக்கு பதிலாக சிரேஷ்ட உறுப்பினர் ஒருவருக்கு பெற்றுக் கொடுப்பதே கட்சியின் உறுதி தன்மையினை காக்கும் என கட்சியின் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அரசின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்க கட்சிக்கு இருக்க கூடிய மிகப் பெரிய பலமே அமைச்சர் பதவியாகும் என்று தெரிவிக்கும விமலில் கட்சிக்காரார்கள் கட்சியின் சார்பாக அமைச்சு பதவி வகிக்காவிடின் கட்சியின் பலம் இழக்கப்படும் என அச்சம் தெரிவிக்கின்றனர். 

ஆசிரியர் - Editor II