கோட்டாவிற்கு வெளிநாடு செல்ல தற்காலிக அனுமதி

கோட்டாவிற்கு வெளிநாடு செல்ல தற்காலிக அனுமதி

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு வெளிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் திகதி வரையில் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

டீ.ஏ. ராஜபக்ஸ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அவர் இன்று விசேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். 

இதன்போது அவருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஆசிரியர் - Editor II