அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கடமைகள் பொறுப்பேற்பு

அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கடமைகள் பொறுப்பேற்பு

பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் உள்ள அலுவலகத்தில் தமது கடமைகளை இன்று முற்பகல் ஆரம்பித்தார்.

பாராளுமன்றத்தில் 120க்கும் அதிகமான பெரும்பான்மை அரசாங்கத்திடம் இருப்பதாக இதன்போது அவர் குறிப்பிட்டார்.

கடந்த மூன்றரை வருடங்களில் ஜனாதிபதிக்கு தாம் எண்ணியவாறு நாட்டை கட்டியெழுப்ப முடியாமல் போனது.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது. நாட்டில் பாதுகாப்பற்ற நிலை உருவானது.

அரச சொத்துக்கள் வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இவ்வாறான விடயங்களே புதிய அரசாங்கம் உருவாவதற்கு வழிவகுத்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மஹிந்த ராஜபக்ஷவின் நிர்வாகக்காலத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக செயற்பட்டு, சர்வதேச நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், கடந்த மூன்று வருடகாலத்தில் நாட்டின் பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சி அடைந்திருந்தது.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசும் போது, புதிய அரசாங்கம் மிகவும் உத்வேகத்துடன் முன்னெடுத்துச் செல்லப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

ஆசிரியர் - Editor II