மைத்திரிக்கு எதிரான குற்றப்பிரேரணையை ஆதரிக்காது தமிழ் முற்போக்குக் கூட்டணி - மனோ அறிவிப்பு

மைத்திரிக்கு எதிரான குற்றப்பிரேரணையை ஆதரிக்காது தமிழ் முற்போக்குக் கூட்டணி - மனோ அறிவிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் குற்றவியல் பிரேரணை கொண்டு வரப்பட்டால், அதனை தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரிக்காது என்று அதன் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டு வரப் போவதாக, ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கூறி வருகின்ற நிலையில், மனோ கணேசன் இது தொடர்பாக கீக்சகப் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அதில், “ஜனாதிபதிக்கு எதிரான உத்தேச குற்றப் பிரேரணையை தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரிக்காது.
பொறுப்புள்ள ஒரு அரசியல் இயக்கம் என்ற முறையில், இன்று நாடு எதிர்நோக்கும் அரசியல் நெருக்கடியை குறைப்பதை தவிர, கூட்டுவதற்கு நாம் ஒருபோதும் உடன்பட மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் - Editor II