குடா கங்கையில் வௌ்ளப்பெருக்கு ஏற்படும் அவதானம்

குடா கங்கையில் வௌ்ளப்பெருக்கு ஏற்படும் அவதானம்
எதிர்வரும் சில மணித்தியாலங்கள் மழை நீடித்தால் களுகங்கையின் கிளை கங்கையான குடா கங்கையின் தாழ்நிலப்பகுதிகளில் வௌ்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

களுகங்கையின் மில்லகந்த நீர் அளவிடும் பகுதியில் வெள்ளப்பெருக்கு நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் , களுகங்கையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஆசிரியர் - Editor II