அவசர எச்சரிக்கை: புயலின் மையம் யாழ்ப்பாணதை நோக்கி... உறுதிப்படுத்தும் ராடார் ஆதாரங்கள்!

அவசர எச்சரிக்கை: புயலின் மையம் யாழ்ப்பாணதை நோக்கி... உறுதிப்படுத்தும் ராடார் ஆதாரங்கள்!

கஜா புயல் யாழ்ப்பாணத்தை அண்டிய பிரதேசத்தில் கரையைக் கடக்கக்கூடும் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியற்துறையின் விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் தெரிவித்திருப்பதாவது,

”கஜா புயலிலின் கரையைக் கடக்கும் இடத்தில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில சமயம் இலங்கையின் வடக்கு மாகாண கரையோரப் பகுதியில் கரையைக் கடக்கக் கூடும்.

ராடார் படங்கள் இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே உள்ளன. இன்று பின்னிரவு இது கரையைக் கடக்கலாம். கனமழையுடன் காற்றின் வேகமும் உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பருத்தித்துறை, வடமராட்சி கிழக்கு, முல்லைத்தீவு கரையோர மக்கள் அவதானமாக இருக்கவும்.” என்றார்.

ஆசிரியர் - Editor II