எரிபொருளின்விலை இன்று நள்ளிரவு முதல்மீண்டும் குறைப்பு

எரிபொருளின்விலை இன்று நள்ளிரவு முதல்மீண்டும் குறைப்பு

எரிபொருளின் விலை இன்று நள்ளிரவுடன் குறைக்கப்பட இருக்கின்றது. சாதாரண, மற்றும் சுப்பர் பெற்றோல்வகைகளும் சாதாரண மற்றும் சுப்பர் டீசல்வகைகளும் ஐந்து ரூபாவினால் குறைக்கப்பட இருப்பதாகதொழில் வெளி நாட்டு வேலைவாய்ப்பு மற்றும் பெற்றோலிய வளங்கள் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்தராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மஹிந்தராஜபக்ஷ பிரதமராகத் தெரிவு செய்யப்பட்ட தன்பின்னர் பொருளாதாரத்தை மேம்படுத்துவும் மக்களுக்கு நிவாரணங்களைவழங்கவும் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு மத்தியில் இதனை முக்கியமான நடவடிக்கையாகக் குறிப்பிடமுடியும்என்றுஅமைச்சர்சுட்டிக்காட்டினார்.

உலகசந்தையில்எரிபொருளின்விலைமேலும்குறைவடையும்எனில் அதன் நன்மைகள் மக்களுக்குவழங்கப்படும். புதிய அரசாங்கம் விலைச்சூத்திரத்தைரத்துச்செய்து மசகெண்ணெயின் விலையை குறைத்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

ஆசிரியர் - Editor II