கத்தியல்ல அது பேப்பர் பிரிக்கும் பேனை- பாலித தேவரபெரும காரசாரமான பதில் வீடியோ உள்ளே

கத்தியல்ல அது பேப்பர் பிரிக்கும் பேனை- பாலித தேவரபெரும காரசாரமான பதில் வீடியோ உள்ளே

தமது கட்சியினர் நாடாளுமன்றினூடாக ஜனநாயகத்திற்காக குரல்கொடுப்பதாக அண்மைய நாட்களாக முழக்கமிட்டுவந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பாலித தேவரப்பெரும நேற்று நாடாளுமன்றிற்குள் மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குத்துவதற்காக கத்தியுடன் பாய்ந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வின்போது எடுக்கப்பட்ட குறித்த படங்களில் பாலித தேவரப்பெருமா கத்தியை ஓங்கியவாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் குத்துவதற்காக பாய்வதும் அதனை சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்து அவரிடமிருந்த கத்தியைப் பறிக்க முற்படுவதும் அவர் தனது கத்தியை தனது சட்டையினுள் மறைத்துவைப்பதும் என தொடர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


ஆசிரியர் - Editor II