18ஆம் திகதி சூரியப் புயல் பூமியைத் தாக்கும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை

18ஆம் திகதி சூரியப் புயல் பூமியைத் தாக்கும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை
தற்போது பூமியை சுற்றி நூற்றுக்கணக்கான செயற்கை கோள்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சூரிய புயல் தாக்குதலால் செயற்கை கோள்களின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.
சூரியனின் வளிமண்டலத்தில் கர்னல் துளை என அறியப்படும் திறந்திருக்கும்  ஒரு சிறிய துளை வழியாக  சூரிய துகள்கள் வெளிப்படும் என   வல்லுனர்கள் கூறுகின்றனர். வாயுப் பொருள் சூரியன் வளிமண்டலத்தில் ஒப்பீட்டளவில் சிறிய துளையிலிருந்து பாய்கிறது என வல்லுனர்கள் கூறி உள்ளனர்.
‘விண்வெளி வானிலை’ இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் சூரிய துகள்கள் இப்போது பூமியின் எந்த திசையை நோக்கி செல்கிறது என்று கணித்து வருவதாக கூறபடுகிறது. இந்த சூரிய துகள்கள் பூமியை தாக்கும்போது, பயங்கரமான விளைவுகள் ஏற்படலாம்.
சூரிய வளிமண்டலத்தில் இருந்து வரும் சூரிய வெடிப்பு துகள்களால் பூமியின்  காந்த புலம் பாதிக்கப்படலாம் என நிபுணர்கள்  கூறி உள்ளனர்.
சூரிய புயல்கள் மனிதகுலத்திற்கு “மிகப்பெரிய அச்சுறுத்தல்களில்” ஒன்று என பரவலாக நம்பப்படுகிறது.
ஒரு பெரிய சூரிய புயல் 1859 ல் பூமியைத் தொட்டது. அதே அளவு நமது நவீன சமுதாயம் இன்று தொழில்நுட்பத்தை சார்ந்து இருப்பதால் இதனை தெரிந்து கொள்ள முடிகிறது.
ஆசிரியர் - Editor II