1000

பிரித்தானிய பாராகிளைடர் சுவிட்சர்லாந்து விபத்தில் பலி

பிரித்தானிய பாராகிளைடர் சுவிட்சர்லாந்து விபத்தில் பலி

பிரித்தானியாவைச் சேர்ந்த பாராகிளைடர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் விபத்தொன்றில் பலியானார்.

சுவிட்சர்லாந்தின் பெர்ன் பகுதியில் வசித்துவரும் பிரித்தானியர் ஒருவர் Mürren என்னும் கிராமத்திலிருந்து பாராகிளைடர் மூலம் புறப்பட்டிருக்கிறார்.

அவரது பாராகிளைடரில் திடீரென ஏதோ சிக்கல் ஏற்பட, அவர் Lengwald பகுதியில் Lauterbrunnenஇலிருந்து Stechelberg செல்லும் நெடுஞ்சாலையில் சென்று மோதியிருக்கிறார்.

அருகிலிருந்தவர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றும், மருத்துவக் குழுவினர் உதவிக்கு வந்தும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை.

இந்த சம்பவத்தையடுத்து அந்த சாலை மூடப்பட்டது. சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஆசிரியர் - Editor II