1000

சென்னையில் சுவிட்சர்லாந்து பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

சென்னையில் சுவிட்சர்லாந்து பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

சென்னைக்கு சுற்றுலா வந்த சுவிட்சர்லாந்து பெண்ணிடம் ரூ.11 லட்சம் மதிப்பலான வெளிநாட்டு கரன்சிகள் அடங்கிய பணப்பையை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர் மார்சலின் கரோல் என்பவர் சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு சுற்றுலா வந்துள்ளார்.

கரோல் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து, 21-ம் தேதி மாலை தி.நகர் பாண்டிபஜாரில் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தார்.

இந்நிலையில் கரோல் ஆட்டோவில் ஓரமாக உட்கார்ந்திருந்து வெளியே வேடிக்கை பார்த்தபடியே சென்றுள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் ஆட்டோவை நெருங்கிவந்த 2 பேர், அவரது கையில் இருந்த பணப்பையை பறித்துக்கொண்டு தப்பினர்.

குறித்த பணப்பையில் 3,500 அமெரிக்க டாலர், 13 ஆயிரம் சுவிஸ் பிராங்க், ரூ.5 ஆயிரம் இந்திய பணம் என சுமார் ரூ.11 லட்சம் மதிப்பிலான கரன்சிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாண்டிபஜார் காவல் நிலையத்தில் கரோல் புகார் கொடுத்துள்ளார்.

போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுபோன்று பல சம்பவங்கள் அப்பகுதியில் நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஆசிரியர் - Editor II