உலகின் சிறந்த காஃபி தயாரிக்கும் பெண் யார் தெரியுமா?

உலகின் சிறந்த காஃபி தயாரிக்கும் பெண் யார் தெரியுமா?

பிரேசிலில் நடைபெற்ற 2018ஆம் ஆண்டிற்கான உலக காஃபி தயாரிக்கும் போட்டியில், சூரிச்சில் வாழும் காஃபி தயாரிப்பவரான Emi Fukahori சாம்பியனாக முடி சூட்டப்பட்டார்.

ஜப்பானை பிறப்பிடமாகக் கொண்ட Emi, 2014ஆம் ஆண்டு வரை மற்ற எல்லோரையும் போல்தான் காஃபியை விரும்பினார்.

ஆனால் 2014ஆம் ஆண்டு, சூரிச்சில் காஃபி கிளப் ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றுக்காக காபி தயாரிக்கும் நிறுவனம் ஒன்றிற்கு சென்றிருந்த Emi, அன்றுதான் தனது வாழ்வில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டது என்கிறார்.

அப்போது அந்த நிகழ்ச்சி எதைக் குறித்தது என்பதைக் குறித்த ஐடியாவெல்லாம் எனக்கு இல்லை, அனால் அவர்கள் காஃபி தயாரிப்பதை எவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொண்டு வேலை செய்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்கிறார்.


தொடர்ந்து வந்த நாட்களை அவர் காஃபிக்காகவே அர்ப்பணித்தார். வேலை பார்த்துக் கொண்டே ஓய்வு நேரங்களில் தனது புதிய ஆசையின் மீது கவனம் செலுத்தினார்.

அவரது தீவிர பயிற்சியில் சூரிச் காபி தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் அவர் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டதும் அடங்கும்.

2015ஆம் ஆண்டு, Emi, சுவிஸ் காஃபி தயாரித்து பரிமாறும் சாம்பியன் என்னும் பட்டம் பெற்றார்.

சரியாக மூன்றாண்டுகளுக்கு பிறகு அவருக்கு பில்டர் காஃபி தயாரிக்கும் பிரிவில் உலகின் சிறந்த காஃபி தயாரித்து பரிமாறும் சாம்பியன் என்னும் பட்டம் கிடைத்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் எங்கு காஃபி அருந்துவதை பரிந்துரை செய்வீர்கள் என Emiயிடம் கேட்டால், சூரிச்சிலுள்ள COFFEE என்னும் காஃபி ஷாப்பில் பரிமாறப்படும் காஃபி அருமையாக இருக்கும் என்கிறார்.


ஆசிரியர் - Editor II