2.0 படத்தை வெளியிட்டது ‘தமிழ் ராக்கர்ஸ்’ – கடுப்பில் ரஜினி!

2.0 படத்தை வெளியிட்டது ‘தமிழ் ராக்கர்ஸ்’ – கடுப்பில் ரஜினி!
உச்சநீதிமன்ற தடை உத்தரவை மீறி தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் ‘2.0’ படத்தை வெளியிட்டது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது.
தயாரிப்பு நிறுவனம் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 12 ஆயிரத்து 567 இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர், தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களில் ‘2.0’ படத்தை வெளியிட தடை விதிப்பதாக உத்தரவிட்டார். இந்த உத்தரவையும் மீறி தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் ‘2.0’ படத்தை வெளியிட்டுள்ளது.
சர்கார் படம் வெளியான சில மணி நேரங்களிலேய தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிடப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போதே ரஜினியின் ‘2.0’ படத்தையும் இணையதளத்தில் வெளியிடுவோம் என தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல் விடுத்தது.
அதன்படி படம் வெளியான அன்றே படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இணையதளம் மீது நடவடிக்கை எடுக்கும்படி ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கையை விடுத்து வருகிறார்கள்.
ஆசிரியர் - Editor II