இந்தியா உலக நாடுகளுக்கு அளித்த பரிசு யோகாசனம்

இந்தியா உலக நாடுகளுக்கு அளித்த பரிசு யோகாசனம்

ஆர்ஜன்டினாவில்; நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பியூனஸ் அயர்ஸ் நகருக்குச்; சென்றுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரெஸ், சவுதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப் கலந்துரையாடிய மோடி, 'அமைதிக்காக யோகா' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். 

இந்நிகழ்சியில் ஏராளமான இந்தியர்களும், ஆர்ஜன்டினா நாட்டவர்களும் பங்கேற்று யோகாசனத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடையே உரையாற்றிய மோடி, இந்தியாவின் பழமை வாய்ந்த சிறப்புக்குரிய யோகாசனம் கலை ஆர்ஜன்டினாவையும் இந்தியாவையும் இணைக்கிறது என குறிப்பிட்டார். 

ஒடிசா மாநிலத்தில் நடைபெற்றுவரும் உலகககிண்ண ஹொக்கி போட்டியில் முதல் வெற்றியை பெற்ற ஆர்ஜன்டினா அணியினருக்கு தனது நல்வாழ்த்துகளை அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் கலைகள், இசை மற்றும் நடனம் ஆகியவை ஆர்ஜன்டினா நாட்டு மக்களை ஈர்த்துள்ளது போல், உங்கள் நாட்டு கால்பந்தாட்ட வீரர்களுக்கு இலட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். 

குறிப்பாக, மரடோனாவின் பெயர் எங்கள் நாட்டில் மிகவும் பிரபலம். ஆரோக்கியம், நலம் மற்றும் அமைதிக்காக இந்தியா இந்த உலகத்துக்கு அளித்த பரிசு யோகாசனம். இந்தியாவுக்கும் ஆர்ஜன்டினாவுக்கு இடையிலான மிகநீண்ட தூரத்தை யோகாசனம் கலை இணைத்துள்ளது.

யோகாசனக் கலை உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. உடலை வலிமைப்படுத்துவதுடன் மனதையையும் அமைதிப்படுத்துகிறது. 

ஒருவரின் மனதில் அமைதி இருந்தால் குடும்பம், சமூகம், நாடு மற்றும் உலகத்திலும் அமைதி நிலவும். 24 மணிநேரம் பயணம் செய்து 15000 கிலோமீட்டர் தூரத்தை கடந்து நான் இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன். உங்களுடைய அன்பையும், ஆர்வத்தையும் பார்க்கும்போது நான் வெளிநாட்டில் இருப்பதுபோல் தெரியவில்லை. இந்தியாவில் இருப்பதாகவே உணர்கிறேன் என்றும் மோடி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர் - Editor II