தனுசும் நானும் வறுமையால் வாடினோம்- செல்வராகவன்

தனுசும் நானும் வறுமையால் வாடினோம்- செல்வராகவன்

தானும் தனுசும் சிறுவயதில் வறுமையால் வாடியதை பற்றி இயக்குனர் செல்வராகவன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

காதல் கொண்டேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் என வெற்றிப் படங்களை கொடுத்தவர். தமிழ் சினிமாவில் செல்வராகவனுக்கு என தனியிடம் இருக்கிறது.

தற்போது இவர் சூர்யா நடிப்பில் என்ஜிகே படத்தை இயக்கி வருகிறார். தனது மற்றும் தனது தம்பி தனுஷின் சிறுவயது பற்றி டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது, “கொடூரமான வறுமையில் பிறந்து வளர்ந்தவர்கள் நாங்கள். இருவேளை உண்டால் அரிது.

அண்டை வீட்டுக்காரர்களின் அன்பு காப்பாற்றியது. ஆயினும் சமூகம் கேலி செய்யும். நீ எல்லாம் என்ன சாதித்துக் கிழிக்கப் போகிறாய் என. எனக்கு தோள் கொடுத்து என் ரசிகர்கள் சாதித்தனர். அதனால்தான் அவர்கள் மட்டுமே என் நண்பர்கள்” என தெரிவித்துள்ளார். 

செல்வராகவனின் இந்தப் பதிவால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவருக்கு ஆதரவாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் அவர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
ஆசிரியர் - Editor II