டுவிட்டரில் செல்வாக்கானவர்கள் பட்டியலில் ஏ.ஆர்.ரகுமான்

டுவிட்டரில் செல்வாக்கானவர்கள் பட்டியலில் ஏ.ஆர்.ரகுமான்

உலக அளவில் டுவிட்டரில் செல்வாக்கு மிக்க ஆண்கள் மற்றும் பெண்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அந்த பட்டியலில் ஏ.ஆர். ரகுமானின் பெயரும் உள்ளது. 


உலக அளவில் டுவிட்டரில் செல்வாக்கு மிக்க ஆண்கள் மற்றும் பெண்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அந்த பட்டியலில் ஏ.ஆர். ரகுமானின் பெயரும் உள்ளது. டுவிட்டரில் செல்வாக்கு மிக்க ஆண்கள் பட்டியலில் இங்கிலாந்தை சேர்ந்த பாடகர் லியாம் பெய்ன் முதல் இடத்தை பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2 -வது இடத்தில் உள்ளார்.

பிரபல அமெரிக்க பாடகர் ஜஸ்டின் பீபர் 3வது இடத்தில் உள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா 4வது இடத்திலும், கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 5வது இடத்திலும் உள்ளனர். 10 பெயர்கள் அடங்கிய இந்த பட்டியலில் அமிதாப்புக்கு 8வது இடமும், ரகுமானுக்கு 10வது இடமும் கிடைத்துள்ளது. 
ஆசிரியர் - Editor II