தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் இந்தி நடிகர்

தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் இந்தி நடிகர்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 63 படத்தில் பாலிவுட் நடிகரை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 


‘சர்கார்’ படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் புதிய படத்தை அட்லி இயக்க இருக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே படத்தில் இணையும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், படத்தில் இந்தி நடிகர் ஒருவரை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜியும் நடிக்கிறார்.

விஜய்யுடன் `பைரவா’ படத்தில் டேனியல் பாலாஜி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
ஆசிரியர் - Editor II