ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி டெல்லியில் 9-ந் தேதி பொதுக்கூட்டம் - விசுவ இந்து பரிஷத் அறிவிப்பு

ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி டெல்லியில் 9-ந் தேதி பொதுக்கூட்டம் - விசுவ இந்து பரிஷத் அறிவிப்பு

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி டெல்லியில் சாதுக்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் வருகிற 9-ந் தேதி நடைபெறும் என்று விசுவ இந்து பரிஷத் இணை செயலாளர் சுரேந்திர ஜெயின் கூறினார். 


புதுடெல்லி:

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி, டெல்லியில் உள்ள ராமலீலா மைதானத்தில் சாதுக்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் வருகிற 9-ந் தேதி நடைபெறும் என்று விசுவ இந்து பரிஷத் இணை செயலாளர் சுரேந்திர ஜெயின் கூறினார்.

டெல்லியில் நிருபர்களிடம் மேலும் கூறுகையில், “ராமர் கோவில் கட்டுவதற்கான மசோதா, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும் என்று நம்புகிறோம். அந்த அளவுக்கு ராமர் கோவிலுக்கு எதிரானவர்களின் மனதையும் எங்கள் பொதுக்கூட்டம் மாற்றிவிடும்.

ஒருவேளை மசோதா கொண்டுவரப்படாவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி அலகாபாத் கும்பமேளாவின்போது முடிவு செய்யப்படும்” என்றார். 
ஆசிரியர் - Editor II